தமிழரொரு பொருட்டேயில்லை

ஜெயம் தங்கராஜா

ஒன்பது ஆடி தொண்ணூற்று ஐந்து
என்பதை நினைத்தாலே வெடித்துவிடும் நெஞ்சு
புனித பேதுரு தேவாலயம் நவாலி
மணித்துளிக்குள் முதியவரோடு பிஞ்சுக்களும் பலி

புக்காரா விமானங்களின் இனப்படுகொலை வேட்டையொன்று
பக்காவாக நிறைவேற்றி முடித்தநாள்
இன்று
உயிரை பாதுகாக்க சரணடைந்தோர் ஆலயத்தில்
உயிரைவிட்டு ஆங்காங்கே உடல்சிதறிய கோலத்தில்

உடுத்த உடுப்போடு பயந்தோடியவரும் திரும்பவில்லை
எடுப்பதை எடுத்துக்கொண்டு பதறியோடியவரும் காணவில்லை
வருவார்கள் அவர்களென காத்திருந்த உறவுகளும்
திரும்பாத அவராலே உறங்காத இரவுகளும்

அப்பாவி மக்கள்மேல் பதின்மூன்று குண்டுகள்
தப்பின்மேல்தப்பை செய்திட்ட சிங்கள குண்டர்கள்
மக்களை கொன்று வீசிய காட்சிகள்
பக்கங்கள் ஒவ்வொன்றும் மறக்காத காட்சிகள்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading