தாயுமானவரே…..

வசந்தா ஜெகதீசன்
தந்தையென்னும் தைரியவாதி
தனித்துவம் பேணிடும் உறவாளி
எதற்கும் முதன்மை முதலீடாகும்
துணையாய் காக்கும் துணிவின்
தேர்ச்சி
பாசச் சிறகின் பண்பில் மிளிரும்
படிப்பினை ஊட்டியை பாதைச் செதுக்கும்
அன்பின் ஊற்றில் அவதாரம் தொனிக்கும்
எந்தை வாழ்வே எதற்கும் முதன்மை
தாயுமானவராய் தற்காக்கும்
பெருமை
வலிகள் நீக்கியே வழியைச் சுட்டும்
வரமாய் கிட்டிய தாயுமானவர்
அன்பின் ஆதாரம் அவனிக்கு அடையாளம்
முதலெழுத்தின் முத்திரையாய்
முதன்மை தந்த அன்புறவே
பேரன்பின் பெருவரம்!
பேறுகொள் தனித்துவம்!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading