தாயுமானவர்

இரா.விஜயகௌரி
தாயுமானவர் என் தந்தையாகினார்
விந்தை உலகிலே எந்தை-முந்தை
உறவினை முழுதாய் நெஞ்சிலே
சிந்தை தெளிவுற சேர்த்த – சொந்தமாகினார்

நிந்தை செய்கிலர் நிதமும் தம்மை
உழைப்பின் ஆழி ஆக்கினார்-வாழ்வை
மகிழ்வின் தொடுகையாய் இழைய
வாய்ப்பை வழங்கி இசைந்தவர்

கூடிக் குதூகலம் இழைந்திட அவர்
வருடிக் கொடுத்துமே வசந்த இழையில்
பின்னினார் அனைத்தும் உணர்ந்து
செப்பினார் உணர்வில் எழுதினார்

ஆனாலும் ஆனாலும் என்ன பின்னர்
மதுவின் பிரியராய் மயங்கி விழுந்ததால்
தாயைத்தஙித்தெழ வைத்தே மறைந்தவர்
நினைவில் உறைகிறார் நேர்மை வாழ்வில் நிறைகிறார்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading