தாயுமானவர்

ஜெயம்

கண்ணுக்கு தெரிந்தும் புரிந்தறியாக் கடவுள்
அன்பை உழைப்பால் காட்டிடும் உறவு
அவர் சொற்களால் தீர்ந்திடும் வலிகள்
அவரைப்போல் எவர் காட்டுவார் நல்வழிகள்

அழத் தெரியாத அற்புதப் பிறப்பு
அளவில்லா பாசத்தை அடக்கிவைப்பதவர் சிறப்பு
கடமைகளை தவறாது கடைப்பிடிக்கும் கடமைவீரன்
உடைமையென சொந்தங்களை எண்ணிடும் சொந்தக்காரன்

கருவறையில் சுமக்கவில்லை ஆயுளுக்கும் சுமப்பவர்
புரியாமல் இருந்துகொண்டு பெரிதாக செய்பவர்
ஓயாமல் உதித்துவிடும் மண்ணுலக ஆதவன்
ஆயிரம் உறவிருப்பார் அவரன்றோ நாயகன்

வாழ்நாளெல்லாம் போராடும் வாழ்க்கை போராளி
தாழ்ந்துவிடாதே குடும்பத்தை தாங்கும் சுமைதாங்கி
மார்பிலும் தோளிலும் சுமந்த தாயுமானவர்
தேரேற்றி கொண்டாடப்பட வேண்டிய
இறையுமானவர்

04-06-2025

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading