“தாயுமானவர்”

நேவிஸ் பிலிப் கவி இல (450)
உடன் வாழ்ந்த தெய்வம்
உலகிற்கே எனை வார்த்த
தியாக தீபம்
கடன் தீர்க்க முடியா அன்பு
அளவிலா பாசப் பரிமாற்றம்

தன்னலங்கள் துளியேதும்
நான் கண்டதில்லை
வருந்தாது வசந்தங்கள்
நான் காணவென்று

நான் நடக்க தான் நடந்த
முட்பாதை அகற்றி
வளமாய் என்னை வாழ வைத்த
கரை காணாத் தாய்மை

என் வாழ்வில் பசுமை தங்க
நாளும் சுமை தாங்கியாய்
சுழன்றோடும் சக்கரமாய்
ஓடி உழன்ற என் தந்தை

என் பருவ காலத்திலே
தந்தையும் தாயுமாகி
கண்ணியமாய் வளர்த்தெடுத்து
பக்குவமாய் கரை சேர்த்த
தாயுமானவர் எந்தை
நினைக்கின்றேன் நன்றியுடன்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading