தாயுமானவர்

ரஜனி அன்ரன் “ தாயுமானவர் “ ( B.A ) 05.06.2025

தமிழுக்கு மெய்ப்பொருள் தனை உணர்த்திய
தாயுமானவரை அறிந்தேன் இலக்கியத்தில்
நான் ஒன்றுமறியேன் பராபரமேயென்று
நாசூக்காய் பாடிவைத்தார் பண்ணோடு
தாயுமானவராய் வாழ்கின்றார் தந்தையர்
தன்னலம் கருதாத தாய்மையோடு
தாயுமானவராய் வாழும் தந்தையரைப் போற்றிடுவோம் !

அறியாத அகவையில் புரியாத பருவமதில்
அன்பான தந்தையை இழந்தசோகம்
அன்னையே தந்தையும் தாயுமாகி – எமை
அரவணைத்து வளர்த்த பாசம்
ஆளாக்கிய நேசம் வாழ்வினை அர்ப்பணித்த தியாகம்
அத்தனையும் பெரும்தியாகம் !

உலகவரலாற்றில் பதியப்படாத காவியம்
உன்னத உயிரோவியம் தந்தை
தந்தையென்ற சொல்லுக்குள் மந்திரங்கள் ஆயிரம்
தாயுமானவராய் குடும்பத்தைக் காத்திடும் இயந்திரம் !

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading