“தாயுமானவர்..”

சிவதர்சனி இரா
வியாழன் கவிதை நேரம்..!!
கவி-2161

“தாயுமானவர்”..
தாயுக்கும் தாயாகி
சேயுக்கும் தாயாகித்
தரணியிலே முதலானவர்
தந்தை எனும் அற்புதமே..

கருவாகி உருவாகக்
காரணி இவரே தான்
கடமை கண்ணியம்
கற்றதும் இவரிடத்தேதான்..

வலுவான கரமிரண்டு
அரவணைப்போடு அள்ளியது
உரமூட்டி வளர்த்தது
உணர்விலே உறைத்தது..

பாசத்தைப் பாடமாக்கி
பக்குவத்தைப் பூடகமாக்கி
கூட்டுக்குள் குருவிகளை
காத்த ஆண்தெய்வமன்றோ..

தோளிலே ஏற்றி வைத்து
தோழமையாய் அணைத்திடும்
ஏழ்மையற்ற மாமனிதம்
தாயுமான பராபரமே..
சிவதர்சனி இராகவன்
5/6/2025

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading