தியாகம்

ராணி சம்பந்தர்

தாயில் பெற்றெடுத்த தியாகம்
சேயில் ஊற்றெடுத்த யோகம்
தூயவர் போற்றிய தெய்வீகம்
தானாகவே திரித்திட்ட தாகம்
தாயகப் பூமி அதிஸ்ட யாகம்

வேட்டுகளில் உயிர்த் தியாகம்
துட்டுக்களில் விரித்த மோகம்
சட்டுப்புட்டென பிரிந்த சோகம்
சுட்டுச் சுட்டுத் துரத்திய நாகம்

வாழ்வு விடியல் தேடிய வேகம்
விண்ணில் வீழ்ந்த வீரத்தியாகம்
மண்ணில் சூழ்ந்தவர் என்றுமே
தேடி அலையும் விடுதலைத் தாகம்.

Author:

சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

Continue reading