புனித ரமலானே

புனித ரமலானே வஜிதா முஹம்மட் மறையை வழங்கிய மாதம்நீ மனிதம் சிறக்கும் ஈகையின் மாதம்நீ அ௫ளைப் பொழியும் மாதம்நீ அகிலமாழும் இறை...

Continue reading

திருமணமாம்

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-65
11-03-2025

பெற்றோரின் ஆசியுடன்
பெரியோரின் அரவணைப்பில்
தலைமுறை தழைக்கவென
தலைமுறையாய் வந்ததிங்கே

இருமனம் ஒருமனதாய்
இணையும் நன்நாளாம்
திருமணமாம் இத்திருநாளில்
ஒருகணமும் பிரியாது

ஒன்றித்து வாழ்ந்து
இளம் சந்ததிக்கு
இயம்பியே செல்வோம்
இல் வாழ்வுதனை!

இயற்கையின் நியதியில்லை
இறைவனின் எண்ணமுமில்லை
குடும்பத்தின் அமைதியுமில்லை
கொடுமை கொண்டாடுவதேனோ?

ஓரினம் சேர்ந்திங்கு
எதிர்கால சந்ததி அற்று
வாழ்தலின் புரிதலகன்று
வாழ்தலே தகுமா இன்று?

Jeba Sri
Author: Jeba Sri