புனித ரமலானே

புனித ரமலானே வஜிதா முஹம்மட் மறையை வழங்கிய மாதம்நீ மனிதம் சிறக்கும் ஈகையின் மாதம்நீ அ௫ளைப் பொழியும் மாதம்நீ அகிலமாழும் இறை...

Continue reading

திருமணம்

ஜெயம் தங்கராஜா

இருமனங்கள் ஒருமனமாகும் அதிசயத்தின் நாள்
திருமணமாகி ஈருயிர் ஓருயிராகும் திருநாள்
பருகிடும் தேனிலும் சுவையான உணர்வாம்
இருவரும் அனைத்தும் மறந்திடும் கணமாம்

சிறக்கடித்து பறக்கும் இளமையின் ஆசை
உறவொன்றின் அருகாமையில் சுகங்களின் ஓசை
ஒருவர் அருமையை இன்னொருவர் புரிந்து
இருவரும் படைப்பாரே ஆனந்த விருந்து

வயது முதிர்ந்தாலும் விலகுமா சொந்தம்
துயர இருட்டிலும் வெளிச்சமாகும் பந்தம்
சந்ததி பெருக்கவே ஏற்படுத்தும் நிகழ்வு
இந்த நாளிலன்றோ கிளைபரப்பும் மகிழ்வு

Nada Mohan
Author: Nada Mohan