திருவிழா

ஜெயம் தங்கராஜா

ஊரெங்கும் வந்தது திருவிழாக் காலம்
பாரங்கே மகிழ்ச்சியில் மக்களின் கோலம்
சிறுவர் முதல் பெரியோரும் கொண்டாட்டம்
உறவுகளாய் நன்னாளில் ஒன்றுசேரும் பெருங்கூட்டம்

இறைவனின் அருள் வேண்டும் தருணம்
நிறைவான நன்றிதனை தெரிவிக்கும் மனம்
சொந்தங்களும் தங்களுக்குள் பகிர்ந்திடுவார் சந்தோசத்தை
சொக்கவைக்கும் அனுபவங்கள் ஆண்டுவிடும் மனத்தேசத்தை

ஒன்றாகக்கூடி ஆடிப்பாட ஒரு தினம்
பண்பாட்டு கலைகளும் நிகழ்ந்திடும் இத்தினம்
வேட்டும் வெடியுமாக திருவிழா களைகட்டும்
வேட்டியும் சேலையுமாக காட்சிகளோ சொட்டும்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading