தைத்திருநாள்…

வசந்தா ஜெகதீசன்
உவகை நிறைகின்ற உளத்தின் பொங்கல்
உலகை ஆளும் ஆதவன் நன்றிப் பொங்கல்
இல்லம் தளிர்த்திருக்கும் இனிய பொங்கல்
உழவுத் தொழிலின் உழைப்பின் விதைப்பில்
அகிலம் மகிழும் அறுவடைப் பொங்கல்
ஆதவன் பணிக்கு அர்ப்பணப் பொங்கல்
விடியல் விதைக்கும் தையின் பொங்கல்
வீரத்தமிழினம் வெற்றிப் பொங்கல்
புத்தாடை பூண்டு மத்தாப்பு வெடியுடன்
முற்றத்தை மெழுகிட்டு மூவர்ணக் கோலமிட்டு
புதுப்பானை தன்னில் புத்தரிசியிட்டு
பொங்கலோ பொங்கலென்று
பொங்கிடும் பொங்கல்
நன்றிதனை பகிரும் நம்முரிமைப் பொங்கல்
உறவுகளை இணைக்கும் உன்னதப் பொங்கல்
ஆவினத்தைப் போற்றும் அடுத்தநாள் பொங்கல்
நன்றிக்கு உரித்தான நம்தமிழர்பொங்கல்!.
நன்றி

Author:

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் _ 217 "உறைபனி" பூம்பனி பூத்திருக்கு பாத்திருக்க மலருது பார்வைக்கு அழகு பாலரின் மனதுக்கு மகிழ்வு! காடுகள்...

Continue reading