நகுலவதி தில்லைத்தேவன்

சந்தம் சிந்தும் கவி 175.

தீயில் எரியும் எம் தீவு.

தீராத நோய் போல்
தீயும் தொடருது எம்தீவில்
சீதையிட்ட சாபம் அன்று
தமிழரின் சாபம் இன்று.

பாலனின் வயிற்று பசி
பாத்த தாய்க்கு வயிற்றில் தீ
பற்றி எரிந்தது நம் தீவு.

எத்தனை முறை தமிழரை
துரத்தி அடித்தனர்
தமிழரின் சொத்து
அபகரித்தனர்,
தமிழரின் உடைமைகள்
தீயில் மனமும் வெந்தது.

உடுத்த உடுப்புடன்
ஊர் திரும்பினர்
காடையர்
விரட்டி அடித்தனனே!

பதவி ஆசையில் பலகோடி
திருட்டு
பாலுக்கு காவல்
திருட்டுபூனைகள்
பத்திரமாய் முதலீடுகள் பற்பல நாடுகளில் சொத்து, வெள்ளைவேட்டி மகிந்தா
குடும்பம்.

பொறுத்த போதும் என்று
பொங்கி எழுந்தனர்
பொசுங்கியது நம் தமிழர்
தீவு
புதிய விடியல் புதிதாய்
பிறந்திடும்

பாவை அண்ணா க்கும் அதிபருக்கும் இரவு வணக்கம் .
நன்றி.

Nada Mohan
Author: Nada Mohan

    சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

    Continue reading