நகைப்பானதோ மனிதநேயம் 79

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-12-2025

வாழ்வு நிலையில்லை வாய்ப் பேச்சு
வழமைக்கு மாறாய் சொத்து குவிப்பு
உயிருக்கு போராடி ஒருவன் துடிக்க
உடனே படமெடுத்து கொமென்ட்டுக்கு காத்திருப்பு

வீதி ஓரத்தில் பிச்சைக்காரன்
வேகமாய் காணாதது போல் நடப்பான்
“சோம்பேறி!” என தீர்ப்பும் கொடுப்பான்
சொத்து நிறைய தனக்கே சேமிப்பான்.

இணையத்தில் பொழுதை போக்கி
இல்லத்தில் தனிமையில் உழல விட்டு
சாதி சமத்துவம் மேடையில் பேசி
சமயத்தில் சுயநல கண்ணாடி சூடி

நகைப்பானதோ மனிதநேயம்?.
நமக்கென்ன என விட்டிருப்பதா
நல்லவற்றைத் தட்டிக்கேட்பதா
எமக்குள்ளே மாற்றம் கொண்டு நாம்
ஏற்றம் காண்போமே..

Author:

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading