நகைப்பானதோ மனித நேயம்

நேசமற்ற மனிதர்களின்
நெஞ்சத்துள் சிறையாகி
நியாயமற்ற செயல்களினால்
நகைப்பானதோ மனித நேயம்

அழுகுரலை தனதாக்கி
அகம் நிறைத்து செயல்களாற்றி
தாய்மை கொள் வாஞ்சையுடன்
வாழ்ந்ததெல்லாம் கனவாச்சோ

விதைத்தெழுந்த போர்ச்செடியின்
களைபிடுங்கும் கொலைவெறிகள்
குருதியிலே விருந்து வைக்கும்
கூட்டமிங்கே. தலைமைகளாம்

கன்றிற்காய் உயிர் களைந்தான்
முல்லைக்கே. தேரீந்தான்
கனிவினிலே. வாழ்வு தந்த – எங்கள்
நேசத்தை ஏன் களைந்தோம்

விஷத்தை இங்கு மருந்தென்று
தித்திப்பாய் உண்பதுவோ
நம் இதயத்து அணுக்களெல்லாம்
மனித் நேயத்தை விதைத்தெழுவோம்

Author:

சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

Continue reading