நாடகம்

ராணி சம்பந்தர்

நாலும் தெரிஞ்சும் அதை
மறைச்சு வைச்சு நடத்தும்
அற்புத நடிப்பிலே நாடிக்
கூடும் நாடகம் நீடிக்குதே

வேலும் மயிலும் துணை
புரியுமென பாலுந் தெளி-
தேனும் பரிந்து படித்து
வாள் வெட்டு,கொலை,
கொள்ளை,துஷ்பிரயோகம்
தொடர ஊடகம் துடிக்குதே

செல்லும் பாதை புரிஞ்சும்
சொல்லும் செயலும் போதை
கொடுத்த அவஸ்தையே இது

காடையரில் மேடை ஏறிடக்
கூடையாய் சூடமேற்றிடவே
கொடிகட்டிப் பறக்க பணமும்,
குணமும் நாடகப் பாத்திரமோ
அதில் முட்டி வெடிக்குதே .

Author: