” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

🙏அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-50
20-02-2025

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்

நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
நிம்மதி எங்கே காண்பீரோ?
இறைவனைத் தான் துதிப்பீரோ
இரக்க குணம் நிலைத்திடுமோ!

கனவு உலகில் மிதந்து
கண்டதெல்லாம் கொண்டிடக்
கற்பனை நிறைந்திடும் உனக்கு
கண்ணெதிரே குலைந்திடும் வாழ்வு

நல்ல அனுபவம் கொண்டது பரவசம்
நலமற்றது கண்டதிங்கே பக்குவம்
ஆசையை அகற்றி இங்கே
ஆற்றலால் வென்று வா

நினைப்பதெல்லாம் நடக்குமென்று
நிம்மதி வேண்டாமிங்கு
எதிர்கொண்டு எண்ணம் போல் வாழ
ஏமாற்றம் காணோமிங்கு.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

Continue reading