நீயே எல்லாமுமாய்

நேவிஸ்பிலிப் கவி இல(373) 26/12 /24

சிந்தையில் நிறைந்து
விந்தையாய் நிகழ்ந்து
எந்தனில் உறைந்து
கலந்து நிறைந்தாய்

இருள் நீக்கி ஒளியேற்றி
உன்னையே ஈந்திட்ட மெழுகாய்
தேய்ந்தாலும் கரைந்தாலும்
மணம் மாறா சந்தணமாய்

எல்லையி்ல்லா கடல் பரப்பில்
தொல்லையின்றி பயணிக்க
இருளகற்றி மருள் போக்கும்
கலங்கரை விளக்காய்

சொந்த பந்தமென்று
கூடியே வாழ்ந்த மாந்தர் மட்டு்ம்
இன்பமெல்லாம் கொள்ளை கொண்டு
எங்கோ தொலைந்து விட்டார்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

Continue reading