நேவிஸ் பிலிப்

வியாழன் கவிதை (52) 10/03/22
தலைப்பு ==உன்னதமே உன்னதமாய்

ஏடெடுத்து எழுதவில்லை ,பள்ளி சென்று படிக்கவில்லை
அனுபவத் தேடல்களை வாய்ச்சொல்லால் வடித்தெடுத்து
ஒவ்வொரு சொல்லும் அமிர்தமென வாழ்க்கைப்பாடம்
எமக்கெனச் சொல்லிச் சென்ற எம் முன்னோர்
நான் போற்றும் உன்னதர்கள்.

வரலாறு நெடுகிலும் பல்லாண்டு பல்லாண்டாய்
வாய் வழியாய் செவி வழியாய் பாரம்பரிய இலக்கியமாய்
விட்டுச் சென்ற அளப்பரிய பொக்கிசமாய்
எனக்கு அறிவு புகட்டிய ஆசான்கள்
நாம் போற்றும் உன்னதர்கள்.

அழகழகான அன்புச் செயலால் அகிலம் வியக்கும் அன்பர்கள்
மண்ணின், மாணிக்கங்களாய் மானிட தெய்வங்கள்
மனதிற்கும் உடலுக்கும் நலம் அளிக்கும் வைத்தியர் தாதியர்கள்
இலை மறை காயாக வாழ்ந்து வழி காட்டுவோரும்
நாம் போற்றும் உன்னதர்கள்.

அள்ளிக் கொடுப்பதிலும் விட்டுக் கொடுப்பதிலும்
தன்னலம் பாராது பொது நலம் காக்கும் தியாகிகள்
உன்னதத்திலும் உன்னதர்கள் இவர்கள்
நம் வாழ்வும் இவர் போன்று அமைந்து விட்டால்
உன்னதமே உன்னதமாய் ஆகுமன்றோ!!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading