பணி

ஜெயம்

உழைப்பை வாழ்விற்கான கடமை ஆக்கி
களைக்காது நாட்களுள் முயற்சியை தேக்கி
பிழைப்பின் காலமிது வாழ்க்கையின்
ஊக்கி
நுழைந்து ஆடிவிடு வெற்றியை நோக்கி

பிணி வரும் வந்தது போகும்
பணிசெய்து கிடப்பதே கடமையும் ஆகும்
பனியென்ன வெய்யிலென்ன அடங்குமோ தாகம்
தணியாது தனித்தாலும் பயணத்தின் வேகம்

நிறைவேறிப்போகுமே காணும் வண்ண கனவுகள்
நரைதிரை கண்டாலும் இளமையாய் நினைவுகள்
சிரமேல் தூக்கி கொண்டாடும் உறவுகள்
கரைதாண்டும் நிம்மதி மகிழ்ச்சியின்
வரவுகள்

உண்பது உழைக்காது உலகுக்கு கேடு
என்பதை அறிந்து உடலை அசைத்திடப்பாரு
எண்ணங்களில் உயர்வின் தன்மையை சூடு
மண்ணுலகில் நல்ல மாற்றத்தை தேடு

Author:

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading