“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன்
வியாழன் கவிதை நேரத்துக்காக
கவி -2152

“பள்ளிப்பருவத்திலே”!!

கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம்
களங்கமில்லாத செயலுங்கண்டோம்
வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம்
அள்ளி நட்பை அணைத்து மகிழ்ந்தோம்..

சிட்டுக்குருவி போல் கதைகள் பேசி
பட்டுச் சிறகென உவகை கூடி
கலைகள் பாதி கல்வி மீதி
கணக்கும் சேர்த்துக் கற்றோம்..

ஆசிரியர் சொல் கேட்டு நடந்து
அப்பப்போ பிரம்படி பரிசாய் வாங்கி
பலவும் அறிந்து பழகிக் கொண்ட
பள்ளி நாட்கள் மேன்மை அன்றோ..

கால நேரம் கடைப்பிடித்து
கல்வி மீது ஆர்வம் காட்டி
உடற்பயிற்சி விளையாட்டு என்றும்
போட்டிகள் போட்டு வென்றும் நின்றோம்..

பள்ளிப் பருவம் உயர்த்தியது அன்று
அள்ளியே வாழ்வை அளித்தது இன்று
அத்திவாரம் பலமாய் போட்டால்
கட்டட வாழ்வு தழைத்தது சிறப்பே..
சிவதர்சனி இராகவன்
21/5/2025

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

Continue reading

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading