பள்ளிப்பருவத்திலே

நகுலா சிவநாதன்

பள்ளிப்பருவத்திலே

பள்ளிப் பருவத்திலே பாலராய் நாம்
துள்ளியோடி துயர் நீக்கிய பருவமன்றோ!
அள்ளி அறிவைப் பெற்று மகிழ்ந்தே
ஆசைக் கனவுகள் சுமந்து வாழ்ந்தோம்

வெள்ளி தோறும் பாட்டுப்பாடி நாம்
வேண்டும் இறையைத் தொழுது வாழ்ந்தோம்
கள்ளமில்லா வெள்ளை மனதாய்
கவலையற்று வாழ்ந்தோம் அன்று

பசுமை வாழ்க்கை பள்ளி வாழ்க்கை
வெறுமையற்று வெற்றியோடு வாழ்ந்தோம்
சுற்றும் முற்றும் சுழன்று ஓடி
சற்றும் கவலை மறந்து வாழ்ந்தோம்

பருவவயது பசுமை நினைவு
உருவம் தெரியா உலகவாழ்வு
விரும்பும் பள்ளி பருவம்
விளையாட்டாய் கடந்ததே!

நகுலா சிவநாதன் 1808

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading