பள்ளிப் பருவத்திலே-70

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
22-05-2025

பள்ளிப் பருவத்திலே

புத்தகப் பையும் சீருடையும்
புன்னகை கலந்த முகப்பொலிவும்
எத்திசை பார்க்கிலும் தோழிகளும்
என்னருமை பள்ளிப் பருவத்திலே

கனவுகள் எண்ணில் அடங்காதவை
கடந்துவிட பயிற்சி பலவாய்
அறிவின் தேடலாய் தொடங்கியவை
அற்புதப் பயணமாய் பிரகாசித்து

ஆசிரியர் அர்ப்பணிப்பு அளப்பெரியது
அழகிய தோழமை அரவணைப்பும்
பசுமரத்தாணியாய் நினைவுகளும்
பட்டுத் தெறிக்குது கண் முன்னே

யுத்த காலம் மொத்தமாய் வர
பிரிவின் நேரம் துயராய்க் கரைய
நெஞ்சம் நிறைந்த பாரமாய்
பள்ளிப் பருவமொரு வரமே.

Jeba Sri
Author: Jeba Sri

ராணி சம்பந்தர் உயிரூட்டும் உருவங்கள் பயிரூட்ட நீர் ஊற்றியே வளர்த்திட்டது போலவே வாழ்வுப் போராட்டமதில் சாதித்திடவே பிறந்தோர் பணி செய்வதே தியாகம் பூரிப்பூட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

Continue reading