பாசப்பகிர்வினிலே-2006

ஜெயா நடேசன்
மண்ணிலே பிறந்து வாழ்ந்திட்டாய்
மடியிலே கனமின்றி மகிழ்வாக
குடும்பத்திலே ஒளி தரும் விளக்காக
மண்ணிலே உலாவிய மனிதத் தாயாக
தரணியிலே அனைவர்க்கும் அன்னையாக
பராமரித்து அன்போடு வளர்த்திட்ட தாதியாக
வீட்டுத் தலைவியாக சகோதரியாக
இம்மையில் அன்னையவள் செயல்பாடுகள்
சுமப்பது சுமை எனத் தெரிந்தும்
சுகமாக சுமந்தவள்
தேடி தேடி அலைந்தாலும்
கிடைக்காத தெய்வம்
என் நாளும் என்றும் அன்னையர் தினமே

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading