பாசப்பகிர்வினிலே….

ரஜனி அன்ரன் (B.A) பாசப்பகிர்வினிலே…. 08.05.2025

பாசமென்பது வெறும் வார்த்தையல்ல
நேசஉணர்வின் ஆழத்தில் பாயும்நதி
உயிருக்குள் உயிர்தந்த உத்தமி
உணர்வோடு உறைந்திருக்கும் இசையருவி
கடவுள் தந்தவரம் கருணையுள்ளம்
வரமாகக் கிடைத்த அன்புறவு
அன்னையில்லா இல்லம் வெற்றிடமே !

பாசப் பகிர்விற்கு இலக்கணம்
அன்பின் உச்சம் அன்னை
அன்னையின் பாசத்திற்கு அளவீடுஏது
அவளின்றி பாசப்பகிர்விற்கு எல்லைதான்ஏது
அனுதினமும் வாட்டுது அவள்நினைவு
அவளின்றிய வாழ்வு என்றும் வெறுமை
இல்லாதபோது புரிகிறது அன்னையின் அருமை !

நிலவின் ஒளியாக மெளனமொழியாக
நித்தமும் வந்திடுவாள் மெல்லிசையாய்
நினைவுகளை மீட்டிடுவாள் துள்ளிசையாய்
பாசப்பகிர்வின் பேரொளி
பத்துத்திங்கள் சுமந்த சுடரொளி !

ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

Continue reading

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading