பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன்

பாசப்பகிர்விலே!

சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி
பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய்
படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம் நீ
சுடர்போல் வளர்த்தாய் சுந்தரத்தாய் நீயம்மா!

வெற்றுக்கடதாசியல்ல நீ வெள்ளித்தங்கம்
முற்றும் துறந்து குடும்பத்தைக் காத்தாய்
பற்று வைத்துப் பாசப்பகர்விலே நிற்கதி
கற்றுக் கொண்டோம் கவலைதானம்மா!

சுட்டிப் பெண்ணாய் சுழன்ற எனக்கு
சுத்தமாய் நீ போனது பிடிக்கலை
நிற்கதியாய் நின்ற நாட்கள்……
நினைக்க நினைக்க இன்னும் அழுகைதான்!
நெஞ்சம் மறந்தாயோ எமைவிட்டுச் செல்ல!
கொஞ்சம் பாராம்மா கொழுகொம்புநீ யம்மா

வெள்ளி நிலவினிலே வேதாந்தக் கதைசொல்லி
அள்ளி அணைத்திட்ட அம்மா
புள்ளி சட்டை போட்டு விட்டு
புதிராய் எமை விட்டு மறைந்தாயோ!

நகுலா சிவநாதன்1806

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading