“பாசப் பகிர்வினிலே”

நேவிஸ் பிலிப் கவி இல(436)

நெஞ்சினில் ஈரம்
கண்களில் கருணை
சொல்லில் கனிவு
எல்லைற்ற அன்பு

மூச்சுக் காற்றீந்து
முன்நூறு நாள் மடி சுமந்து
மாசில்லா மாரமுதூட்டிய
தூசில்லா தூயவளே

இன்ப துன்பமுடன்
சோக வலிகள் சூழ்ந்த போதும்
பாரமேற்றும் படகு போன்றெம்மை
பக்குவமாய் கரை சேர்த்தாய்

மழை பெய்த நாட்களெல்லாம்
இடுப்பினிலே எனைச் சுமந்து
புடவை முந்தானையை குடையாக்கி
நீ நனைந்தென்னைக் காத்த பாசம்
எப்படி நான் மறப்பேனோ..??

மறு பிறவி உண்டென்றால்
என் மகளாய் நீ பிறக்க
தேயாத செருப்பாய் நான் பிறக்க
தேவ அருள் வேண்டுகிறேன்
நாளும் உன்னை சுமந்திடவே,!!!

பாசமுடன் நன்றி வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading