ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

பாதை

ஜெயம்

வாழ்க்கை
ஒரு நேர்கோடல்ல
சில நேரம் வளைந்து நகரும்
சில நேரம் மறைந்து மறைக்கும்
ஒவ்வொரு நாளும் புதுக்கதை புதுநிலவு
23-10-2025

ஓடும் எல்லோரும் வெல்ல முடியாது
ஆனால்
நிற்காமல் ஓடுபவன்
வெல்லாமலிருக்க முடியாது

பாசத்தால் அணைக்கப்பட்ட நிமிட பயணம்
பின்னோக்கிப் பார்த்தால்,
பிழைகள் பாடங்களாய் மலர்கின்றன
முன்னோக்கிப் பார்த்தால்
நம்பிக்கை ஒரு சிறிய ஒளியாகத் திகழ்கிறது

நம் பாதை சரியானதா
யாரும் சொல்ல முடியாது
ஆனால், நடக்கத் தொடங்கிய தருணமே
அந்த வழி நம் வாழ்வின் உண்மை.

உன் பாதை உன் தெரிவு
வாழ்வை நேசி உணர்ந்து பார்
ஒவ்வொரு துடிப்பும் ஓர் கவிதை
ஒவ்வொரு பரிமாணமும் உயிரின் ஓசை

Author:

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading