பாமாலையில் பூமாலை

ராணி சம்பந்தர்

காலம் செய்த கோலம்
ஆலம் விழுதே தமிழன்
புலம் பெயர்ந்த பொழுது

வந்தோர் வரவேற்ற தளம்
தந்ததே இலண்டன் தமிழ்
வானொலி இனிய களமது

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்
அதில் சிந்திய முத்துக்களில்
மிடுக்கான அடுக்குத் தொடுப்பு
உடன் துடுப்பாக மிதந்து வந்த
முந்நூறு கிழமையது

சோர்வு, அயர்வு அகற்றி சேர்ந்த
உண்மை பயிரிட்டு உயர்வெனும்
நீரிட்டு கவிஞர் உள்ளமதை உயிர்
ஊட்டி வளர்த்த பெரும் பாவையரும்

திறனாய்வுக் கவிஞர்களும் ஆயிரம்
ஆயிரம் ஆண்டு இணைந்து ஒளி
பரப்பிட பாமாலையில் பூமாலை
இட்டு வாழ்த்தி வரவேற்றிடுவோமே .

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

Continue reading

வணக்கம் வசந்தாஜெகதீசன் வீட்டுத்தோட்டம்...அழகுறுபயனின்பயன்பாடு ஆரோக்கியஉணவின்முதலீடு முயற்சியின்மூலதனமாகும் முழுமையில்மனதுநிறைவாகும்காய்கறி,கனிகள் ருசி நிகரே பொழுதுபோக்கின் முதன்மை வலு முதலீடு அற்ற வருமானம் நித்தம் நித்தம் பயனாகும் பலராய்...

Continue reading