பால தேவகஜன்

முகமூடி

அழகான அன்பை
அசிங்கப்படுத்தி
அன்பற்றவர்களாக்கிய
அந்த முகமூடி

நம்பிக்கை கொண்டவரை
அவநம்பிக்கையோடு
நெகிழ்ந்து போகவைத்த
அந்த முகமூடி

அகலும் வரையில்
அன்பிற்கு நிலையுமில்லை
அமைதிக்கு ஆயுளுமில்லை
அகிலத்தில் மகிழ்வுமில்லை.

விலகுவதற்கு
காரணம் தேடுபவர்கள்
எமக்குக் கிடைத்த
சாபம்.
அவர்கள் ஒருபோதும்
ஒத்துப்போவதில்லை.

சொல்லாததை
சொன்னதாய்ச் சொல்லி
மற்றவரைக்
குறைசொல்லி கோபமாய் இருப்பவர்கள் பிழைக்கத் தெரிந்தவர்கள்.
அவர்கள் வாழ்வில்
சந்தோசம் இருப்பதில்லை.

துன்பத்தில் துணை நிற்பவர்கள்
எமக்கு இறைவனால்
நியமிக்கப்பட்டவர்கள்.
அவர்கள் வாழ்வில்
தோற்றுப்போவதில்லை.

துன்பத்தில் கரம்கொடுத்து
தூக்கிவிட மறந்தவர்கள்
நெருங்கத் தகுதியற்றவர்கள்.
அவர்கள் இறைநிழலில்
இளைப்பாறப்போவதில்லை.

மதியாதார் என்றோ
ஒருநாள் மதிக்கப்படுகிறார் என்றால்
அவர்களிடம் ஏதோவொரு
தேவையிருப்பதாய்
உணருங்கள்.

தேவை முடிந்ததும்
முறித்துவிட்டுப் போனவர்கள்
முடிவு என்றும்
சுபமாய் இருப்பதில்லை.

உறவுகளை அனுசரிக்காமல்
விலகி நிற்பவர்கள்
விலகுவதால் ஏதோ
ஒன்றை எதிர்பார்ப்பதாய் உணருங்கள்..

அவர்கள் வாழ்வது போல்
தெரியும்..
ஆனால் அவர்கள்
நிம்மதியோடு
வாழ முடியாதவர்கள்.

தனிமரம் தோப்பாவதில்லை..
தனித்துப் போனால்
அங்கு மரியாதை
இருப்பதுமில்லை….

வாழ்க்கை கடினமானதல்ல
உறவுகளை நோகடித்து வாழ்வதென்பது
அவ்வளவு
எளிதானதுமல்ல.

வாழும் வரைதான் வாழ்க்கை
சாகும்வரைதான் யாக்கை.
அன்போடிருந்து
உறவுகளை நேசித்தால்
மட்டுமே
வாழ்க்கை வளமாகும்
இன்பம் உனதாகும்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

    Continue reading

    வணக்கம் வசந்தாஜெகதீசன் வீட்டுத்தோட்டம்...அழகுறுபயனின்பயன்பாடு ஆரோக்கியஉணவின்முதலீடு முயற்சியின்மூலதனமாகும் முழுமையில்மனதுநிறைவாகும்காய்கறி,கனிகள் ருசி நிகரே பொழுதுபோக்கின் முதன்மை வலு முதலீடு அற்ற வருமானம் நித்தம் நித்தம் பயனாகும் பலராய்...

    Continue reading