கவிதையெனக் கிறுக்கினேன்(52)…
புனித ரமலானே
பால தேவகஜன்
நம்பிக்கை
நம்பிக்கையான காலம்
என்றுதானே நாங்கள்
காத்துக் கிடந்தோம்
காயம் ஆறிக்கிடந்தோம்.
வேவுக்கா! எங்களின்
உள்ளே உழைந்தாய்
சாவுக்கா! எங்களை
சமாதானம் செய்தாய்.
கபடமாய் எங்களை
கைகோர்க்க வைத்தாய்
சலுகைக்காய் எம்மவரை
விலைபோகவும் வைத்தாய்.
துரோகத்தை எங்களின்
உள்ளே நுழைத்தாய்
விடுதலை மேன்மையின்
தூய்மையை உடைத்தாய்.
நம்பிக்கை நாயகராய்
நம் தலைவரின் தேர்வில்
நயவஞ்சகம் ஊட்டி
நம்மையே உடைத்தாய்.
ஈழம் என்ற இலக்கோடு
இறுதிவரை உறுதிகொண்ட
கொள்கையை உடைத்தெறிந்த
உடன்படிக்கை காகித்த்தில்
எங்கள் ஒப்பற்ற தலைவன்
ஒப்புதல் கேளாமல்
சுயமாம் முடிவெடுத்து
உந்தன் சுயத்தை இழந்தாயே
ஆயிரமாயிரம் மாவீரர் கனவு
ஆகாயம் தொட்டு நின்ற
எங்களின் துணிவும் கொஞ்சம்
ஆடித்தான் போனது
ஒற்றை ஒப்புதலில்
ஒற்றுமை குலைத்து
ஈழத்தாயை வஞ்சித்த
ஒற்றனாய் ஆனேயே!
அம்மான் என்ற உச்சம் இழந்து
அடிமையாகி எதிரி காலில் வீழ்ந்து
காட்டிக்கொடுப்போடு எங்களை
கருவறுக்க நினைத்தாயே
உன் துரோகத்தால்
நாங்கள் தளரவில்லை
எங்கள் உச்சம் கண்டு
உலகமே அச்சத்தில் எங்களை
தளர்த்திட முடிவெடுத்தது
கர்மா! எவரையும்
விட்டு வையாது என்பதை
காலம் இன்று காட்டி நிற்கும்
சாட்சியாகிப்போனாயே இன்றி நீ!
