மாற்றத்தின் ஒளியாய்-2140 ஜெயா நடேசன்

புத்தாண்டின் விடியலில் பொங்கியே புத்தொளி மலரட்டும் புதுப் படைப்பாகி புது யுகம் சிறக்கட்டும் புவியாழும் இறையோனின் பார்வையாய் இருளான...

Continue reading

மாற்றத்தின் ஒளியாய்

ராணி சம்பந்தர் மாற்றத்தின் ஒளியாய்த் தங்கியே மலர்ந்திடுவாய் முற்றத்திலே சுற்றமோடு பொங்கி மகிழ்ந்திடுவாய் வற்றா ஊற்றாய்ப் புலரும் சூரியனை வரவேற்றிடவே சுற்றவரக் கோலமிட்டிட முக்கல்...

Continue reading

புதிர்

கேள்வியாகப் பிறந்து
பதிலாக உறங்கும்
கேலியான வினாவாகி
மூளையை அரிக்கும்

சொல்லால் சுழன்று
சிந்தையை சோதிக்கும்
சொல்லவிடாது விடையை
குழப்பியே சாதிக்கும்

முடிச்சுக்களாய் நின்று
மனதினைத் தட்டும்
வரிக்குள்ளே ஆயிரம்
அர்த்தங்களும் சொட்டும்

தெரிந்தது போலிருக்கும்
தெரியாதது அதுவாகும்
புரிந்தது போலிருக்கும்
புரியாததாய் புதிராகும்

விடை சரியென்றாலே
புன்னகையும் மலர்கின்றது
அதைப் பெருமையுடன்
சொல்லியே மகிழ்கின்றது

ஜெயம்
14-01-2026

Author: