தன்னம்பிக்கை 82

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-01-2026 சுற்றியிருக்கும் இருள் சூறையாட நினைத்தால் துணிவெனும் தீச்சுவாலை கொழுந்து விட்டெரியட்டும்! விழுந்தால் எழுவாய் விதிதனை வெல்வாய் விடியும்...

Continue reading

புதிர்

ராணி சம்பந்தர்

புதிருக்குள் புதிர் போட்டாலே
அதிர்வுக்குள் பதில் கிடைத்திடும்
எங்கப்பன் குதிருக்குள் இல்லை
கேட்டதும் போட்டானே ஒரு போடு
பிடிபட்டானே உதிர்ந்த தங்கப்பன்

தொடுத்த வினா உங்கப்பன் எங்கே?
வீட்டில் இல்லை எனும் பதில் வராது
சொன்ன விதமோ அதிர்வில் அதிர
கடனை அடைக்கவே முடியாமலேயே
குதிருக்குள் ஒளிர்ந்திருந்த பொய்யே
பொட்டென உடைத்திடுமே

அறிவுத்திறனில் புதிர் பூத்திருக்கும்
விடுகதை தொடுத்து காத்திருக்கும்
சிந்தனையில் சிதைந்த உருவமோ
போர்த்திருக்க தேடித்தேடிய புதுமை
வதைக்க புரிந்தும் புரியா அறிந்தும்
அறியாது தெரியாத புதிருக்கு பதில்
கிடைத்திடுமே கிடைத்திடுமே .

Author:

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading