ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

புன்னகை

ஜெயம்

உலகத்தில் எளிய விலையுயர்ந்த பரிசு
அழுகின்ற உள்ளத்தின் அமைதிக்கு மருந்து
கண்ணீரை தடுக்கின்ற வல்லமை இதற்குண்டு
புன்னகையால் மறைந்திருந்த வலிகள் விலகுவதுமுண்டு

படிந்த துயரம் மனதிலிருந்து எடுபடும்
சிரிப்பொன்றாலே வசந்தமாய் வாழ்க்கை கட்டப்படும்
மருத்துவமில்லாமல் காயத்தை புன்னகையும் ஆற்றிவிடும்
கடுமையான வாழ்க்கைகுள்ளும் சுகத்தை ஊட்டிவிடும்

உதடுகளில் மலரும் அழகிய அற்புதம்
சிரிப்பொன்றே வாழ்நாளை ஒளிமையமாக்க போதும்
புன்னகை மனிதர்களை பரஸ்பரம் இணைக்கும்
புன்னகை நண்பனென பகைவரையும் அணைக்கும்

புன்னகை மானுடரின் வரவேற்பு மொழி
பொன்னாக நேரத்தை மாற்றிவிடும் புன்னகைத்துளி
மனிதனின் உயர்ந்த பண்புகளில் ஒன்று
கனிவான புன்னகை காலத்திற்கும் நன்று

Author: