ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

புன்னகை

ராணி சம்பந்தர்

சில்லென்ற மேனி சீதனமாய்
நழுவும் மெல்லிய இனிமையில்
தழுவும் புன்னகை உதடுகளில்
ஒட்டாது ஒட்டித் தூக்குவிக்கும்

வல்லவனுக்குப் புல்லும் சாதனம்
கல்லையும் கனிய வைக்கும் இது
நல்லதைக் கொட்டும் நூதனமது
வல்லமை காட்டி வேதனமாக்கும்

இல்லாத பொய் கன்னம் சிவக்கவே
பொல்லாத கொடூர எண்ணம் பிறக்க
அல்லும் பகலும் மனமும் சுமக்கவே
கொல்லும் புன்னகை தொக்கினிற்கும்

சொல்லத் துடிக்கும் தொல்லைகளிலே
மல்லுக் கட்ட வெடிக்கும் சில்லெடுப்பில்
பல்லைக் காட்டிச் சிரிக்கவே முடியாமல்
முள்ளாய்க் குத்தும் மௌனம் புன்னகை.

Author: