ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

“புன்னகை “

சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்_212

” புன்னகை”
புன்னகை செல்வன்
பூவரசன் நாவரசன்
நானிலம் பேற்றும்
நற்றமிழ் அரசன்!

தமிழ்ச்செல்வா தாய்நிலம்
உனை வணங்கும்
உன் புன்னகை இன்னும் மங்கவில்லை பொங்குகின்றது
உன் கனிவான பேச்சு காதில் கேட்கின்றது!

வான்படை செய்த சதியால்
புன்னகை செல்வனை தமிழீழம் இழந்தது
திட்டமிட்ட அரசின் நாசகார சதிக்கி இரையாகிய
பிரிகேடியர் தமிழ்ச்செல்வா உன் புன்னகை இன்னும் பூத்து குலுங்குது!

காய்த்து கனியாக
காத்திருந்தாய் காக்கை வன்னியன் கூட்டம் காட்டி கொடுத்ததே
காலம் காலமாக காக்கை வன்னியன்
கூட்டத்தால்
எம் தாய் நிலம் பறிபோனதே!
நன்றி 🙏

Author: