பூத்தது மேதினம்

ரஜனி அன்ரன் ( B.A ) “ பூத்தது மேதினம் “ 01.05.2025

மேதினி தன்னில் மேதினம்
உழைப்பவர் மேன்மைக்கு உரமானதினம்
உழைக்கும் வர்க்கம் மேம்பட
உழைப்பாளிகளும் மகிழ்வுற
உதயமானதே மே ஒன்றில் மேதினமாக !

உலகையே பசியாற்றும் உழைப்பாளரை
உன்னத மானத்தைக் காக்கும் தொழிலாளரை
உலகின் சுத்தத்தைப் பேணிடும் பாட்டாளிகளை
உழைத்துக் களைத்திடும் உயர்வானவரை
உன்னதமாக்க பூத்தது மேதினியில் மேதினம் !

உலகின் படைப்புக்களை எல்லாம்
உதிரம் என்ற உளியால் செதுக்கிய சிற்பிகளுக்காய்
உதிரத்தை வியர்வையாக்கி
உன்னத மானிட முன்னேற்றத்திற்காய்
உழைத்திடும் உழைப்பாளிகளுக்காய்
உன்னதமாய் பூத்த தினமே மேதினம்
உழைப்பாளிகள் தியாகத்தைப் போற்றுவோம்
உணர்வுதனை மதித்திடுவோம் !