பேரிடர் 94

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
09-12-2025

பேரிடர் ஒன்று பெரிதாய் வந்து
பெருந்துயரம் நிரம்பித் தந்து
வீடுகள் இடிந்து உறவுகள் பிரிந்து
விம்மி அலறி விழுந்தடித்தோடி

ஆர்ப்பரிக்கும் கடலும் அதிர்வலையும்
ஆங்காங்கு மலைச்சரிவும்
வானம் உடைந்து மழை கொட்ட,
வனமும் பூமியும் ஆத்திரம் காட்ட

கட்டிய கோபுரம் கழண்டு கொட்டி
கதிர்களெல்லாம் கரைந்து போக
விதி என்று சொல்லி விலகிப் போவதா?
வினாக்கள் எழுப்பி விடை தேடுவதா?

நெகிழி குப்பை கடலில் கலந்ததா
இனங்களுக்குள் வந்த மதவெறியா
இயற்கையை அழித்ததால் சீற்றமா??
இயற்கையை நேசித்து இணைந்தே வாழ்வோம்.

Jeba Sri
Author: Jeba Sri

ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பேரிடர்.. இயற்கை அனர்த்தம் பாதிப்பாய் இயல்பு வாழ்வு மாற்றமாய் அவலம் சூழ்ந்த பொழுதுகள் யாரும் யாருக்கும் உதவாது உயிரின்...

Continue reading