வர்ண வர்ணப் பூக்கள் 65
வர்ண வர்ண பூக்களே!
போனும் போராட்டமும் ஆக்கம் )173)
: 09.01.25
ஆக்கம் 173
போனும் (Phone)
போராட்டமும்
போனும் போராட்டமும்
போதும் போதும் என
தலை பிய்த்துக் கொண்டது
தானுண்டு தன் வேலை உண்டு எனக் காணும்
காணுமென வாழ்ந்தவன் மனம்
பித்தலாட்டமானது
காணாமல் கண்டவனுக்கு இதுவும்
வேணும் இன்னும்
இன்னும் வேணுமெனப்
பிதற்றிக் கொண்டது
முக்கிய தேவைக்கு
வந்தது முக்கி முக்கித்
தேவையற்றதில் நுழைந்தது
குடும்பம் குலைந்து
திக்குமுக்காடியது
என்ன பார்ப்பது
எது கேட்பது கன்னம்
வைத்த கண்களில்
போதை அடிமை
ஆக்கியது
அழகு அழகு கொள்ளை
அழகென கறுப்போ
வெள்ளை பூசிக் கொண்டது
அன்று கடிதக் காதல்
ஆனது இன்று போனில்
காதலாகிக் கல்யாணம்
வரை சென்றது
ஆள் தெரியாது வயது
புரியாது சின்னனில்
தொடங்கி பென்னம்
பெரிசோடு உரையாடி
மகிழ்ந்து உபத்திரவம்
ஆனது
ஆளை ஆள் கண்ட
போது மூளை வேலை
செய்தது
பாழாய்ப் போன போனால் போராட்டம்
வந்ததென்று மனம்
உடைந்து பத்திரமானது
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
