போரிடர்

ராணி சம்பந்தர்

பேரிடர் எனும் பெருந்துயரே !
போரிடரில் நிர்க்கதியாகிய
மானிடர் உயிரில் நீர்த்தாகமா?

நூறிடர் வருமெனக் கூறிடர்
எவரோ அவர் சாபந்தானோ
ஊறிடும் கார்த்திகைப் பூவில்
உறிஞ்சிடும் மழை நீர் மோகமா

உதிரம் கரைந்தது கூறிடுமே
கல்லறைப் பூக்களின் மண்
அரிஞ்சிடும் கண்ணீரே என
கார்கால விண்மேகங்களே
மானிடரில் ஏனிந்த மோகம்

ஒவ்வோர் வருடப் புதுப் பெயர்
இவ்வருடத் திட்வாவோ தீவிரம்
ஊரெல்லாம் அல்லோலம்
வேரறுந்த மரம் அலங்கோலம்

இடைமுறிந்த வாழை ஊர்கோலம்
மண் சரிந்த புதைகுழி பலிகோலம்
இன்றும் துரத்தும் இயற்கைப் பசியே
இன்னுமின்னும் தீரவில்லையா
உன் தாகம் .

Author:

சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

Continue reading