ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

போர்க்கோலம்-78

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025

இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…

சேவல் கூவும் காலையும்
சீராக வீசும் சில்லென்ற காற்றும்
பச்சைப் பசேலென நெல்வயலும்
பசுதரு சுடு பாலும்

பரந்து நிறைந்த மனமும்
பண்ணிசையோடு ஆலயமணியும்
பட்டாம்பூச்சியான வாழ்வு
பறித்தெறிந்தது போர்க்காலம்

சாம்பல் தெருக்களாய்.
சகதி வாழ்க்கையாய்
உயிர்க்கொலையும் உடமையிழந்து
உலகெங்கும் சிதறல்களாய்

சிக்கி முக்கி சின்னாபின்னமாகி
சுதந்திரமில்லா சுதந்திரதினமும்
மழலைக்காய் எதிர்காலம் மலரட்டும்
மௌனமாகி போர்க்காலம் மறையட்டும்.

Jeba Sri
Author: Jeba Sri

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading