ப.வை. ஜெயபாலன்

சந்தம்சிந்தும் சந்திப்பு296
முகமூடி
சந்தம் சிந்தும் சந்திப்பு கதகளி தனிரக நடனம்
கண்கவர் ஆடை வடிவம்
பறை இசை பாடல் ஒலிர
பாங்காய் அசைவு மிளிர..

சிங்கார முகமூடி முகத்தை
சிரசொடு மூடும் கழுத்தை
அங்க அபிநய நளினம்
ஆடல் உடல் மொழி பகரும்

சிங்கள கண்டி நடனம்
சேர்ந்த பாணியே இதுவும்
முன்பாய் கேரளம் சேரம்
மொழி இவை கலப்புசாரம்

கதகளி கதை சொல்லும் ஆடல்
கத எனில் கதை பொருள்
கூறல்
களி என்ற பத பொருள் நடனம்
கண்டேன் களிப்பில் என்
இதயம்
-ப.வை.ஜெயபாலன்-

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மூதாதையரில் முழங்கியது முழங்கியவரில் புழுங்கியது புழுங்கியவரில் பூ பூத்துக் குலுங்கிய மொழியே தமிழ் பெற்றோர் தினம் பேசியது உற்றார்...

    Continue reading