மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 290
17/12/2024 செவ்வாய்
இதயம்
————
இடது பக்க நெஞ்சினிலே,
இரும்புக் கூட்டின் நடுவினிலே
இதயம் என்ற பெயரினுடனே!
இருப்பாய் வேலைப் பழுவுடனே!

நான்கு அறைகொள் தாயகமே!
நமக்கு நீயென்றும் நாயகமே!
கூம்பு வடிவு அமைப்பகமே!
குருதி தாங்கிடும் குதவகமே!

இடதும் வலதும் தொடர்பில்லா,
இயற்கை அமைப்பு உனதன்றோ!
நல்லது கெட்டது கலக்காது-நம்
அவன் செய்த அமைப்பன்றோ!

உள்ளக வாசல் இரண்டுடனே,
உனக்கு வாசல்கள் ஆறுண்டாம்!
நல்லதும் கெட்டதும் காவிடவே,
நாடியும், நாளமும் உதவிடுமாம்!

பாரிருள் படரும் இரவினிலும்
பகலவன் பணிசெய் பகலினிலும்,
ஈர்பன்னி ரெண்டு வேளையிலும்
இயங்கிக் கொண்டு இருக்கிறாய்!

நன்றி என்பது சிறுவார்த்தை
நாம் உனக்கு சொல்வதற்கு!
குன்றி விடாது உன் நலத்தை
குறைவின்றி காப்ப துன்கடமை!
நன்றி
மதிமகன்

Nada Mohan
Author: Nada Mohan

    சக்தி சிறினிசங்கர் சிறுமைகளை அகற்றிடவே பொங்கு சினத்தினையே களைந்திடவே பொங்கு கறுத்தஉள்ளம் கண்டாலே பொங்கு காசுக்காய் அநீதிசெய்வோர் கண்டால் உறுத்துமட்டும்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பொங்குவாய்... நிறைமதியாண்டாய் நித்தம் மகிழ்வாய் வரவுகள் சீராய் வளர்மதி வையமாய் வற்றாத கல்வியாய் உலகியல் ஐக்கியம் உயர்வின் பதிவாய் பொங்குவாய் புத்தாண்டே புலத்திலும்...

    Continue reading