மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 296
18/02/2025 செவ்வாய்
“முகமூடி”
—————
முகமே, அகமதன் கண்ணாடி
மூடி மறைப்பது சரியாமோ!
இகத்தில் இப்படி பலகோடி
இருப்பதை நீயும் அறிவாயோ!

நல்லவர் தாமென முகம் மூடி
நாடெனும் அரங்கு தனிலேறி
அல்லவை செய்யும் ஒருபோது
அகத்திரை கிழியும் அப்போது!

நன்மையும் செய்யுமா முகமூடி
நலமதும் தருமா உனைத்தேடி!
வன்மை செய்வோர் சிலர் கூடி
வரமாய் கொள்வதுஅதை நாடி!

சுயத்தை மறைக்கும் முகமூடி
சுகம் காண்பவன் ஒரு பேடி!
பயத்தை ஊட்டிடும் முகமூடி
பாரில் அழித்திடு இதை தேடி!

வாயை, மூக்கை மறைத்து
வாழ வைத்தது ஓர் கவசம்!
பேய் உயிர்க்கொல்லி அழிந்து
போக வைத்தது முக கவசம்!
நன்றி
“மதிமகன்”

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading