26
Jun
ஜெயம் தங்கராஜா
சுகதுக்கங்களோடு ஒரு மண்ணுலகப் பயணம்
நாளும் கற்கும் அனுபவங்களாலோ பயனும்
ஆயுளுக்குமான...
26
Jun
அதிகரிக்கும் வெப்பம்
நகுலா சிவநாதன்
அதிகரிக்கும் வெப்பம்
கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு
வாடை குறையும் வசந்தப்பொழுதாய்
வேளைதோறும் வெப்ப விடியல்
வேண்டும்...
26
Jun
“காலம் போற போக்கைப் பாரு”
நேவிஸ் பிலிப் கவி இல(461)
காலங்களில் வசந்தமாய்
அடர்ந்த காடு உயர்ந்த மலை
சலசலக்கும் நீரோடை
வெள்ளிக்...
மதிமகன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்: 161
08/02/2022 செவ்வாய்
தலைப்பு: சுயவிருப்பு
“இது புது அழகு!”
கருவண்டுக் கண்ணழகு
கார்வண்ணக் குழலழகு
பிறைபோலும் நுதலழகு
பேதையின் பேச்சழகு!
கோவை இதழழகு
கோதை இடையழகு
ப.வையின் கவியழகு
பாமுகம் அரங்கழகு!
சங்கமக் கழுத்தழகு
சடையினில் பூவழகு
பொங்கல் நுரையழகு
பூவைக்கு உடையழகு!
சேலைக்குக் கரையழகு
சோலைக்குப் பூவழகு
பாலைக்குப் பழமழகு
பாலுக்குச் சுவையழகு!
முல்லைப்பூ பல்லழகு
முழுமதியின் முகமழகு
சொல்லுக்குப் பொருளழகு
சோர்வில்லா நடையழகு!
இரண்டிற்கு ஒன்றழகு
இளமைக்கு சிரிப்பழகு
பிரண்டைக்கு தண்டழகு
பிரமனுக்குத் தலையழகு!
நன்றி
மதிமகன்

Author: Nada Mohan
01
Jul
வணக்கம்
போர்க்கோலம் ...
கண்டங்கள் எங்கும் கதிகலங்கிட
துண்டங்களாகி உடலங்கள் வீழ்ந்திட
எங்குமே போர்க்கோலம் பூணுது ...
01
Jul
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-07-2025
இயற்கை அழிவு ஒருபக்கம்
இனக்கலவரம் மறுபக்கம்
தியாகத்தின் விதை சரித்திரமாகி
தாயகக்கனவு கலைந்த கதையிது…
சேவல்...
29
Jun
ராணி சம்பந்தர்
காலஞ் செய்யும் கோலம்
வால் கொய்யும் வல்லரசின்
நாசகார வேலையில் சிக்கி
முக்கித் தவிக்கும் அப்பாவிகள்
மெல்ல...