மனித நேயம்

வியாழன் கவிதை நேரம்..
கவி இலக்கம்-2172

மனித நேயம்..
ஆறறிவின் உயிர்ப்பினில்
அகத்தில் நிறை காவியம்
அன்னை ஊட்டிய தாய்ப்பால்
அள்ளித்தந்த உணர்வோவியம்
எத்திசை வாழ்ந்த போதும்
எங்கே அழுகை ஒலி கேட்பின்
அக்கணம் விரல் நீளும் -பின்
துயர் ஆற்றும் ஈரம் இதுவாமே..

பிறப்பவர் இறப்பது இயல்பென
இருப்பை உணர்த்தும் காலம்
இறப்பவர் முன்னே காண்கிலே
இரக்கமும் கொள்வது ஏனோ
உதிரம் மண்ணில் சிந்திடவும்
உயிரே அதற்கு விதை ஆயினும்
புன்னகை சூடியே போகையில்
கரையுதே மனித நேயம்..

எத்தனை உன்னதர் தோன்றினர்
உலகுக்கு உயர்வைக் காட்டினர்
கலங்கும் உளத்தின் கலவரத்தை
கனிந்த செயலால் மாற்றினர்
பேதமை இன்றியே தடத்தை
மற்றவர் வாழ்ந்திட பதித்தனர்..
சிவதர்சனி இராகவன்
25/6/2025

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் உயிரூட்டும் உருவங்கள் பயிரூட்ட நீர் ஊற்றியே வளர்த்திட்டது போலவே வாழ்வுப் போராட்டமதில் சாதித்திடவே பிறந்தோர் பணி செய்வதே தியாகம் பூரிப்பூட்டும்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

Continue reading