மனோகரி ஜெகதீஸ்வரன்

பூத்திடுவாய் புத்தாண்டே

அகம்புகுந்தறம் அன்பினைத் தூவ
முகமெங்கும் புன்னகை பரவ
பகடுதுரித்த வாழ்வினை வாழ
இகமெங்கும் சாபயம் அகல

தடையிடுவார் சங்கதிகள் சிறுக்க
படையகன்று நிலமது கிடைக்க
முடைகழன்று மூர்கமும் அகல
தடையொடுங்கிச் சகலதும் நிறைய
நடைநிமிர்ந்து நிலமதில் உலவ
பூத்திடுவாய் புத்தாண்டே

மனோகரி ஜெகதீஸ்வரன்

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading