ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர்

முள்ளிவாய்க்கால் முனகலிலே
இன்னும் எம் காதினில் ஒலிக்க
மூச்சுப் பேச்சின்றி உயிருடனே
மூடிய கிடங்கிலே அடங்கியதே

துள்ளிக் குதித்து விளையாடிய
எம் பிறந்த மண் சிவந்து எரிந்து
சுடுகாடாய் சாம்பலாகி வெந்தே
இருந்த இடந்தெரியா முடங்கியது

படாதபாடு பட்டுத் துடி துடித்ததே
உயிர்களில் வெடித்த கொத்துக்
குண்டுகள், பொசுபரசு நச்சுகள்
போர் விமானத்தில் சிதறியதே

சொல்லிச் சொல்லிக் கதறுகிற
அழுகுரலில் குதறிய இரத்தக்
கண்ணீரில் ஊறிய உதிரமதில்
மழலை முதல் இளையோரும்
பெரியோரும் பதறிய மே 18 ஐ
என்றென்றும் மறக்கமுடியுமா?

Nada Mohan
Author: Nada Mohan

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading