மாண்போடு வருவாய்

நகுலா சிவநாதன்

மாண்போடு வருவாய்

மார்கழியின் பனித்துளிகள் மண்ணை முத்தமிட
கார்காலப்பொழுதுகள் கருமை முகில்கூட்டமாக
மாட்டுத் தொழுவத்தில் உதித்த யேசுவும்
காட்டும் விண்ணொளியும் கவலையை மறக்கச் செய்தன

யேசுவின் பிறப்பில் தேசம் மகிழ்கையில்
வீசுகின்ற தென்றலும் விண்மீனாய் ஒளிர
நாதமாய் நல்விடியல் நன்றாய்த் தெரியுதே!
நன்மைகள் நிலைக்கவே நல்லொளியும் ஒளிருதே!

மார்கழியின் மகிழ்வில் மலர்ந்திட்ட மாதமே
சீர்வண்ணச் சிறப்புகள் பெற்றே
ஊர்போற்ற உலகிலே ஒற்றுமை உயர்வாய்
ஒன்றாகும் நன்நாள் இந்நாளே!;

ஆண்டை நிறைத்திட்ட மார்கழித் திங்களே!
தீண்டும் துன்பங்கள் திசையெங்கும் பறக்க
மீண்டும் புதிய மார்கழியாய் புத்தாண்டில்
மாண்போடு வருவாய் வருடத்தை நிறைப்பாய்!

நகுலா சிவநாதன் 1792

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

Continue reading