ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

மாற்றம் ஒன்றே……

மாற்றம் ஒன்றே……கவி….ரஜனி அன்ரன் (B.A) 06.03.2025

மாற்றமென்பது இயற்கையின் நியதி
நேற்றும் இன்றும் நாளையும் மாற்றம்
காலம் செய்யும் மாயமே மாற்றம்
ஞாலம் மீதில் எத்தனையோ மாற்றம்
மனிதனும் மாறுவான் வாழ்க்கைப் பயணமதில்
மாற்றம் ஒன்றே மாறியபடி
ஏற்றம் காணும் இயல்பு இதுவே !

பட்டை தீட்டிய வைரமாக
பாமுகப் பக்கமும் கண்டது மாற்றம்
படக்கலவைகளும் பட்டொளி வீசிட
புத்தம் புதிதாய் வடிவமைப்பு
அத்தனை நிகழ்வும் மொத்தமாய் மாற்றம்
அதிபரின் தொடுப்பும் அருணின் கைகொடுப்பும்
அழகோவியமாய் காட்சி தருகுது !

வாழ்க்கை நதியின் ஓட்டத்தில்
வருகின்ற மாற்றங்களும் இயல்பே
மாற்றம் ஒன்றே ஏற்றம் காண
மாற்றம் என்பது புதுமையே !

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading